விளையாட்டு
முல்லை. மாவட்ட ஆண்கள் அணி 2ம் இடம் ; பெண்கள் அணி 3ம் இடம்
2022ம் ஆண்டு வட மாகாண கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தையும், பெண்கள் அணி 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறையில் மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம்(24) போட்டிகள் நடைபெற்றன.
இதில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தையும், பெண்கள் அணி 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி சார்பாக கரைச்சிக்குடியிருப்பு, இரணைப்பாலை, திம்பிலி, வள்ளிபுனம், உடையார்கட்டு, பாரதிபுரம், விஸ்வமடு ஆகிய பிரதேசங்களின் வீர வீராங்கனைகள் பங்குகொண்டிருந்தனர்.