பொது
ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பயணம்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டிலிருந்து ஜப்பான் புறப்பட்டுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பிலிப்பைன்ஸ் செல்வதற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமர் மற்றும் பல அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.