crossorigin="anonymous">
பொது

இராணுவ படைப் பிரிவுகளினது கொடிகளுக்கு ஆசிர்வாதம்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொண்டாடடப்படயிருக்கும் இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளினதும் கொடிகளுக்கு ஆசிர்வாதம் பெறும் நிகழ்வு (28) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது.

ஆசிர்வாத நிகழ்வில் இராணுவத் தலைமையகம், தொண்டர் படைத் தலைமையகம், அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், அனைத்து முன்னோக்கு பாதுகாப்பு பராமரிப்புப் பகுதிகள், படைப் பிரிவுகள், பிரிகேட்டுகள், படையணிகள், பிரிவுகள் மற்றும் இராணுவப் பயிற்சிப் பாடசாலைகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து இராணுவக் கொடிகளும் ஆசிர்வாதங்களுக்காக தலதா மாளிகைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே உட்பட இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளிலும் இருந்து இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 87 = 97

Back to top button
error: