எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கபப்லினால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்ளை மதிப்பீடு செய்வதற்கு ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் விசேட நிபுணர்கள் குழு ஒன்று இன்று (16) இலங்கை வரவுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீ விபத்திற்கு உள்ளாகி கடவில் முழ்கியுள்ள எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கபப்லினால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்ளை மதிப்பீடு செய்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வருகை தரும் இக்குழுவில் மூவர் இடம்பெற்றிருப்பதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
தீ விபத்திற்கு உள்ளாகி கடவில் முழ்கியுள்ள கப்பல் தொடர்பில் செயல்படும் இலங்கை நிபுணத்துவ குழுவுக்கும் இவர்கள் உதவுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.