பொது
தேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டையை (NIC) பெற்றுக்கொள்வதற்கான சேவைக்கட்டணங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன
மறுசீரமைப்பு செய்யப்பட்ட சேவைக்கட்டணங்கள் நவம்பர் 1 முதல் கட்டண உயர்வை அமுல்படுத்த உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமககள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
15 வயதை பூர்த்தி செய்து முதல் முறையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் சேவைக் கட்டணமாக 200 ரூபா செலுத்தப்பட வேண்டும்.
காலாவதியான தேசிய அடையாள அட்டையை மாற்றம் செய்வதற்கு 200 ரூபாவும், தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு 1000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படும்.
தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள கட்டணமாக 500 ரூபாவும் அறவிடப்படும்.