ஐக்கிய இராச்சிய பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகல்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக (20) அறிவித்துள்ளார்
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி பதவியிலிருந்து விலகியுள்ளார்.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற இவர் போல் இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.
லிஸ் டிரஸ் பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரிட்டன் பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்.
பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
I recognise however that, given the situation, I cannot deliver the mandate on which I was elected by the Conservative Party.
I have therefore spoken to His Majesty The King to notify him that I am resigning as Leader of the Conservative Party.
— Liz Truss (@trussliz) October 20, 2022