crossorigin="anonymous">
பொது

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் நிறைவேற்றம்

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் இன்று (21) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற 2ஆவது வாசிப்பு மீதான் வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 179 எம்.பிக்கள் வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் இதற்கு எதிராக வாக்களித்தார்.

இடம்பெற்ற 3ஆவது வாசிப்பின்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.3ஆவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் 174 பேர் ஆதரவாகவும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை எனவும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் சபாநாயகர் அறிவித்தார்.

இதன்போது சரத் வீரசேகர எம்.பி. வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் (20) இன்றும் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − = 51

Back to top button
error: