(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட 70 ஆவது ஊடகக் கருத்தரங்கு சனிக்கிழமை (22) முழு நாள் கருத்தரங்காக வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், வரகாபொல பிரதேசத்தின் தமிழ் மொழி மூலமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் சித்தீக் ஹனீபாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக வரகாபொல பிரதேச சபைத் தலைவர்
சரத் சுமன சூரிய மற்றும் கௌரவ அதிதியாக வரகாபொல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.பீ.எம்.சரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், கலைவாதி கலீல், ஜாவிட் முனவ்வர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஐ.நஸீரா, சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சமீஹா சபீர், அஷ்ரப் ஏ சமட் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.