பொது
க. பொது. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம்

நடைபெற்ற 2021 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
பெறுபேறு தயாரிக்கும் இறுதிக் கட்டப் பணி தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்..
சாதாரண தரப் பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 486 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது