பொது
நொத்தாரிசு, ஆவணங்கள் பதிவு செய்தல் சட்டமூலத்திற்கு சான்றுரை
2022 ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு
2022 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம்
மற்றும் ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம்
ஆகியவற்றில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று முன்தினம் (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டமூலங்களும்
2022ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்தச்) சட்டம்,
2022ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம்
என்ற பெயரில் 2022 ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.