crossorigin="anonymous">
பொது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ரிஷாட் பதியூதீன் விடுதலை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணையை மீண்டும் அழைப்பித்த போதே நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்​தேக நபராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை ​நீதவான் திலிண கமகே, நேற்று (02) சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவ வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை பிறப்பித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ​தொடர்பில் விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினரால் ரிஷாட் பதியூதீன் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 8 = 15

Back to top button
error: