crossorigin="anonymous">
பொது

தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஸன்டெல் எட்வின் ஷால்க் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை அண்மையில் (28.10.2022) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கை தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு தரப்பு விஜயங்களையும் அதிகரிக்க முடியும் என உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். இந்தக் கருத்துடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவும் இணங்கினார்.

பல்வேறு விடயங்களில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர், தமது நாட்டின் உண்மையைக் கண்டறியும் குழு வெற்றியளிப்பதற்கு தென்னாபிரிக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் அதில் பங்களிக்கவிருக்கும் குழுவினருக்கிடையில் இறுதி இணக்கப்பாட்டை எட்டுவது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் ஊடாக அனைத்துத் தரப்பினரதும் முழுமையான ஒத்துழைப்புடன் ஆணைக்குழுவை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியடைய முடிந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இரு நாட்டுக்கும் இடையில் பரஸ்பர விடயங்கள் குறித்துக் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: