crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பீ சீஆர் இயந்திரம் அன்பளிப்பு

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பீ சீஆர் இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜகத்திடம் இன்று (16) கையளிக்கப்பட்டது.

‘People’s Leasing’ கம்பெனியின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அயராத முயற்சியினால் இந்த பீ சி ஆர் இயந்திரம் பெறப்பட்டுள்ளது

கடந்த மே மாதம் 23ம் திகதி ‘People’s Leasing’ கம்பெனிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளரிடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் ‘People’s Leasing’ கம்பெனியின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை பீ சீஆர் இயந்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு பாடுபட்ட கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 + = 40

Back to top button
error: