‘வரவுசெலவுத்திட்ட அலுவலகம்’ சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனவின் பங்குபற்றலுடன் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான அடிப்படை சட்டமூலம் குறித்து இங்கு வருகை தந்திருந்த உறுப்பினர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.
இச்சட்டமூலத்தை மேலும் விரிவாக ஆராய்ந்து இரண்டு வாரங்களில் மீண்டும் கூடிக் கலந்துரையாட இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த விசேட கூட்டத்தில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, சபை முதல்வரும் அமைச்சருமான கௌரவ சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அமைச்சர்களான கௌரவ நிமல் சிறிபால.த சில்வா, கௌரவ மஹிந்த அமரவீர, கௌரவ அலி சப்ரி, கௌரவ டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து,
கௌரவ வாசுதேவ நாணயக்கார, கௌரவ காமினி லொக்குகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ கபீர் ஹாசிம், கௌரவ குமார வெல்கம, கௌரவ சாகர காரியவசம், கௌரவ ஷான் விஜயலால். சில்வா, கெளரவ விமல் வீரவன்ச, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கௌரவ வீரசுமண வீரசிங்ஹ, கௌரவ வி. இராதாகிருஷ்ணன் மற்றும் கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.