crossorigin="anonymous">
பொது

மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இணைப்பாளர்களுக்குமிடையிலான கூட்டம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் மற்றும் இலங்கை முழுவதும் மாவட்ட ரீதியாக மாவட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கும் இடையிலான கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு மருதானையிலுள்ள அஷ்- ஷபாப் (AMYS) தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் போரத்தின் செயலாளர் ஸிஹார் அனீஸ், மீடியா போரத்தின் ஆலோசகர் என்.எம்.அமீன் உற்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான என்.எம். அமீன் பேசுகையில் ஊடகவியலாளர் முன்னுள்ள பொறுப்பு குறிப்பாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றின ஊடகவியலாளர்களோடு நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது போன்ற விடயங்கள் பற்றி கவனம் செலுத்துவதும் அவசியம் என சுட்டிக்காட்டினார்

செயற்குழுவுக்கும் மற்றும் மாவட்டக்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இணைப்பாளர்களுக்கும் இடையிலான கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட இணைப்பாளர்கள் முஸ்லிம் மீடியா போரத்துடன் எவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் மாவட்டத்தில் அவர்களால் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன

இதனைத்தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் போரத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றதுடன் அதில் கடந்த கூட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பலரும் பல கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்

நிகழ்வில் இறுதியில் “தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?” எனும் தொனிப்பொருளில் விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட செயற்குழு உறுப்பினருமான எம்.பி.எம். பைரூஸ் வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.(படம்:ஏ.எஸ்.எம்.ஜாவித்)

 

 

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − 47 =

Back to top button
error: