உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2080 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று உலகின் எதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கும் குழந்தை ஒன்று உலகின் மக்கள்தொகையை 801 கோடியாக அதிகரிக்க செய்திருக்கலாம்.
1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. அதனை ஒப்பிடுகையில் தற்போது உலக மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
2050 ஆம் ஆண்டு பூமியின் மக்கள்தொகை 900 கோடியாகவும் 2080 ஆம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும்.
அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகளில் இருந்துதான் வரபோகிறது. என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.