crossorigin="anonymous">
பொது

மத்திய கலாசார நிதியத்தின் செயலாற்றுகை கோப் குழுவின் விசாரணைக்கு

மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் இன்று (24) நடைபெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டது.

கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2015-2017 காலத்தில் பணியாற்றிய மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகங்கள் அனைவரும் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் மத்திய கலாசார நிதி சட்டம், செயலாற்றுகை, நோக்கம் போன்றவை கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன், மத்திய கலாசார நிதியத்தின் ஆட்சிக் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டமை தொடர்பிலும், நிதியத்தின் பணம் உரிய முறையில் செலவுசெய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக குழுவின் 209 வது கூட்டம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தி, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

மத்திய கலாசார நிதியத்தின் செயல்பாடுகள் குறித்த கணக்காய்வு அறிக்கையின் படி கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் வருமாறு,

1) நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபை அமைப்பானது அனைத்து மதங்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். மேலும் சபையானது நடப்புக் காலத்திற்கு ஏற்ற வகையில் கூட்டம் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களை உடனடியாக எடுப்பதற்காக செயற்பட வேண்டிய வகையில் நிதியச் சட்டத்தினை பொருத்தமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

2) நிதியத்தின் அனைத்துப் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் சபையின் வருடாந்த செயலாற்றுகைத் திட்டங்கள் யதார்த்தமான முறையில் தயாரிக்கப்படல் வேண்டும் மற்றும் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் நோக்கினை அடைவதற்கு செயற்படல் வேண்டும்.

3) நிதியத்தின் செயற்பாட்டுன் தொடர்புடைய அனைத்துக் காரணங்களும் விதிகளைத் தயாரித்தல் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

4) நிதியத்தின் மொத்த செலவுகளில் அதிக சதவீதத்தினை ஊழியர்களுக்கான கிரயம் பிரதித்திததுவப்படுத்தியிருத்தமை தொடர்பில் மற்றும் பாதுகாப்பு போன்ற செயலாற்றல் பணிகளுக்காக அதிக பங்களிப்பு செய்யப்பட்டிராமை தொடர்பில் கவனம் செலுத்தி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், கலாச்சார உரித்துக்களை உடைய இடங்களை பாதுகாப்பதற்காக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியமை.

5) நிதியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைய நுழைவுச் சீட்டு கட்டணம் அறவிடுதல், பணத்தை முதலீடு செய்தல் மற்றும் முதலீட்டுத் தொகையினை மீளப் பெற்றுக் கொள்ளல் ஆகியன இயலுமான அளவில் முன் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டியமை.

6) கொடுப்பனவு செய்கையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணத்திற்கும் மற்றும் பதவியணிக்காக ஆட்சேர்ப்பு செய்கையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவை மற்றும் அரச நிர்வாக, முகாமைத்துவத் சேவைகள் சுற்றறிக்கைகளுக்குப் இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டியமை.

7) முகாமைத்துவ சேவைகளின் திணைக்களத்தின் அனுமதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு ஒழுங்குமுறைகளில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியமை மற்றும் நிதியத்துடன் பதவியணியை இணைப்புச் செய்யும் போது சரியான தேவை இனங்காணப்பட்டு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் நிதியத்தின் சிரேஷ்ட மட்டத்திற்காக நிரந்தர அடிப்படையில் தகைமை வாய்ந்த பதவியணியை ஆட்சேர்ப்பு செய்தல் தொடரபில் கவனம் செலுத்த வேண்டியமை

8) நிதியத்தின் ஆட்சேர்ப்பு ஒழுங்குமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பதவியணிக் கட்டமைப்புக்கு முரணாக கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின் அடிப்படையில் முறையற்ற வகையில் பதவியணியினரை ஆட்சேர்ப்பு செய்வதைத் தவிர்த்தல் மற்றும் வேறு நிறுவனத்திற்காக சேவைகளை வழங்குவதற்கு நிதியத்திற்கு பதவியணியினை ஆட்சேர்ப்பு செய்வதினைத் தவிர்த்தல் வேண்டும்.

9) செலவினத் தேவைப்பாட்டினை விஞ்சும் வகையில் முதலீடுகளை மீளப் பெறுவதை தடுத்தல் மற்றும் அதன் பிரகாரம் செயற்பட்டிருத்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியமை.

10) இணையத்தின் மூலம் இலத்திரனியல் நுழைவுச்சீட்டு வழங்குதல் போன்ற பதிய செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல் வேண்டும்.

11) கலாசார மற்றும் சமயத்தலங்களில் இருந்து வருமானம் ஈட்டுகையில் இலத்திரனியல் நுழைவுச்சீட்டு ஒழங்கமைப்பை நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்துத் தலங்களும் உள்ளடங்கும் வகையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் அதற்காக தகைமை உடையவர்களை பதவியணியில் ஈடுபடுத்தல்.

12) காலத்திற்கு ஏற்ற மற்றும் உண்மையான தேவைப்பாடுகளையும் கருத்திற்கொண்டு உரிய மதிப்பீட்டுடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் நிதி வெகுமதிகள் / நிதியேற்பாடு வழங்கப்பட வேண்டியமை மற்றும் அதன் நிதிப் பெறுமதியை தீர்மானித்தல் உரிய அதிகாரத்துடனான தரப்பினரால் மேற்கொள்ளப்பட வேண்டியமை.

13) உரிய நிர்மாணச் செயற்திட்டங்களின் செயன்முன்னேற்றம் தொடர்பில் பின்தொடர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியமையும். உரிய நலன்பெறும் நிறுவனங்களையும் கிட்டிய மேற்பார்வையுடன் மேவுகை செய்ய வேண்டியமை.

14) அனைத்து பெறுகை நடவடிக்கைகளையும் அந்த வழிகாட்டிகளுக்கழைய மேற்கொள்ளப்பட வேண்டியமையும், தொல்பொருள் ஆணையாளரின் மற்றும் பிற தகுதிச் சான்றிதழ்களின் ஒப்புதலுடன் மட்டுமே பாதுகாப்பு / கட்டுமானம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியமை.

15) அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டின் பிராகரம் செலவினம் மேற்கொள்ளல் மற்றும் திருத்தப்பட்ட பாதீடுகளை சமர்ப்பித்து அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்,
16) உரிய காசோலைகளை கையளிக்கும் போது நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் உரிய முறையில் பெறுநருக்கு காசோலையை ஒப்படைத்தலும், நிறுவனத்திற்கு வழங்கிய முற்பணங்களை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்தல்.

17) தேசிய இயந்திர சாதனங்கள் நிறுவனத்தை பலப்படுத்தும் நோக்கில் அமைச்சரவையினால் அரச செயற்திட்ட பெறுகைகள் நடைமுறையிலிருந்து விலகி நேரடி ஒப்பந்த நடைமுறையின் கீழ், தேசிய இயந்திர சாதனங்கள் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை கையளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், மீண்டும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு இந்த ஒப்பந்தங்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டமையால் அமைச்சரவையின் நோக்கங்கள் நிறைவேறாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன், கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேற்கொண்ட உள்ளக விசாரணை அறிக்கையை உடடியாகக் கோப் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணை செய்வதற்காக மத்திய கலாச்சார நிதியத்தை 2023 ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் கோப் குழுவின் முன் அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் கடமையாற்றிய, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இந்த சந்திப்பிற்கு அழைக்கப்படவுள்ளதாக குழுத் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ லொஹான் ரத்வத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ நளீன் பண்டார, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கெளரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கெளரவ ரஜிகா விக்கிரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.சோமரத்ன விதானபத்திரன, மத்திய கலாசார நிதியத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 4 =

Back to top button
error: