crossorigin="anonymous">
பொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (28) நடைபெற்றுள்ளதுடன் அக் கூட்டத்தில்  எட்டப்பட்ட முடிவுகள்

01. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சுவிற்சர்லாந்தின் ஏற்றுமதி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சுவிற்சர்லாந்து அரசின் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க செயலாளர் அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இறக்குமதி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து பதனிடப்பட்ட உணவுகள், பாதுகாக்கப்பட்ட மீன் மற்றும் கடலுணவுகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட துணிகள் போன்ற ஏற்றுமதி உற்பத்திகளுக்காக விஞ்ஞான ரீதியான கற்கையொன்றை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கான ஐரோப்பிய சந்தையை அணுகுவதற்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தல் இக்கற்கையின் நோக்கமாகும். குறித்த கற்கைக்கு சுவிற்சர்லாந்து பிராங்க் 100,000 நிதி சுவிற்சர்லாந்தின் இறக்குமதி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2005-2010, 2010-2015 மற்றும் 2015-2020 வரையான காலப்பகுதிகளுக்கான இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு கையொப்பமிடப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உப கருத்திட்டமொன்றின் செலவு 300 மில்லியன் இலங்கை ரூபாய்களாக மட்டுப்படுத்தப்படுவதுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதி 5 பில்லியன் இலங்கை ரூபாய்களாக அமையும். ஆனாலும், நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக 300 மில்லியன் ரூபாய்கள் உயர்ந்தபட்ச பெறுமதி எல்லையில் ஒருசில கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சிரமமாக அமைவதால், குறித்த எல்லையை 600 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பதற்கும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதியை 10 பில்லியன் இலங்கை ரூபாய்களாக அதிகரிப்பதற்கும் இரு தரப்பினர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நிதியிடலுக்காக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டம் மற்றும் பசுமை கொள்கைகளுக்கான உரையாடல்களுக்கு வசதியளித்தல் கருத்திட்டம்

‘பசுமைக் கொள்கைகளின் அடிப்படையிலான இலங்கை’ மற்றும் ‘உள்ளடக்கப்பட்ட ஒற்றுமையான சமூகத்தை’ உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் 2021 தொடக்கம் 2027 வரையான காலப்பகுதிக்காக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வருட அளவுகோல் கருத்திட்டத்தின் கீழ் நிதியனுசரணை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த துறைகள் மற்றும் ஒத்துழைப்புப் பணிகளுக்காக 2021-2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்காக 80 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் இலங்கையில் ‘சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக 16 மில்லியன் யூரோ நிதியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த நிதி வழங்கலைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிதியுதவி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நிலைபெறுதகு அபிவிருத்தி ஒத்துழைப்பு, பங்களிப்பு மற்றும் பொருத்தமான தொழிநுட்பங்கள் தொடர்பான சர்வதேச நீர் மாநாடு – 2022

2022.12.14 ஆம் திகதி தொடக்கம் 2022.12.16 வரை ‘நிலைபெறுதகு அபிவிருத்தி ஒத்துழைப்பு, பங்களிப்பு மற்றும் பொருத்தமான தொழிநுட்பங்கள் தொடர்பான சர்வதேச நீர் மாநாடு – 2022’ ஒழுங்குபடுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நீர் தொடர்பான தொழில்வாண்மையாளர்கள், வெளிநாட்டு பிரிதிநிதிகள், சர்வதேச அமைப்புக்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்தல், ஆய்வுகளுக்கான கருத்துக்கள் மற்றும் அறிவுப்பகிர்வு, நீர் தொடர்பான வாண்மையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் பல்வேறு நாடுகளில் நீர் தொடர்பான அனுபவங்கள் மற்றும் வெற்றியளிப்புக்களை பகிர்ந்துகொள்ளல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு குறித்த மாநாட்டை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்களை தொடர்புபடுத்தி முன்மொழியப்பட்டுள்ள மாநாட்டை நடாத்துவதற்காக நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு மைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் 6,000 பேருக்கான இயலளவு விருத்தியைக் கட்டியெழுப்புவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் பிரான்ஸ் Ksapa கம்பனிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரான்ஸ் அரசின் பொருளாதார, நிதி மற்றும் மீட்பு அமைச்சு மற்றும் பிரான்ஸ் மிசெலின் கூட்டுறவு நிதியுதவியின் கீழ் பெருந்தோட்டத்தறை அமைச்சின் வழிகாட்டலில் பிரான்ஸ் Ksapa கம்பனியால் மொனராகல மாவட்டத்தில் படல்கும்புர மற்றும் மெதகம போன்ற இறப்பர் செய்கைப் பிரதேசங்களிலுள்ள 6,000 சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக ‘இறப்பர் உற்பத்தியில் பெறுமதிச் சேர்க்கை அதிகரித்தல் மற்றும் சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் இயலளவை அதிகரிக்கும் கருத்திட்டம்’ நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், கருத்திட்டத்தின் மொத்த செலவு 726,700 யூரோ எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு மைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. மேம்படுத்தப்பட்ட ‘ஒத்துழைப்பு மற்றும் இலத்திரனியல் சாட்சிகளை வெளிப்படுத்தல் தொடர்பான இணையக் குற்றங்கள் பற்றிய சமவாயம்’ இற்கான இரண்டாவது மேலதிக நெறிமுறை வரைபில் கையொப்பமிடல்

(Budapest Convention on Cybercrime)

‘புடாபெஸ்ட் இணைய குற்றங்கள் தொடர்பான சமவாயம்’ என அழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட ஒத்தழைப்பு மற்றும் இலத்திரனியல் சாட்சிகளை வெளிப்படுத்தல் தொடர்பான இணையக் குற்றங்கள் பற்றிய சமவாயத்தின் பங்காள நாடாக இலங்கை கையொப்பமிட்டுள்ளதுடன், குறித்த சமவாயம் 2015.09.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறையிலுள்ளது.

அதன் இரண்டாவது மேலதிக நெறிமுறை வரைபில் கையொப்பமிடும் நிகழ்வு 2022.11.30 ஆம் திகதி ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் இடம்பெறவுள்ளதுடன், குறித்த நெறிமுறை வரைபில் கையொப்பமிடுவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நலன்புரி கொடுப்பனவு செலுத்தல்களுக்கான ஒழுங்குவிதிகளை விதித்தல்

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நலன்புரி கொடுப்பனவு (கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு தகவுடையவர்களாகவுள்ள ஆட்களைத் தெரிவு செய்தல்) ஒழுங்குவிதிகள் 2022 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த அறநிலையங்கள் கட்டளைச்சட்டத்தை (Buddhist Temporalities Ordinance) திருத்தம் செய்தல் மற்றும் தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம்

1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த அறநிலையங்கள் கட்டளைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் பல சந்தர்;ப்பங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பினும், பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பாக உடன்பாடுகளை எட்டுவதற்கு இயலாமை போனமையால் குறித்த திருத்தங்களை மேற்கொள்வதற்கு இயலாமல் போயுள்ளது. தற்போது குறித்த தரப்பினர்களுக்கிடையே முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஏதேனும் பௌத்த பிரிவுகள் அல்லது பிக்குமார் பேரவையால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கமைய ஏதேனுமொரு தேரர் செயற்படாத சந்தர்ப்பத்தில் குறித்த பிக்குமார் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் உள்ளடங்கிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கருத்தில் கொண்டு, தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) அடிப்படைச் சட்டமூலத்தை மேலும் திருத்தம் செய்து, குறித்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக மற்றும் தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலத்திற்காக தொடர் நடவடிக்கைகளi மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 47(1) ஆம் உறுப்புரையின் கீழ் ஒழுங்குவிதிகளை விதித்தல்

தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்திற்கோ அல்லது சொத்துக்கோ சட்ட விரோதமாக பாதிப்புக்களை ஏற்படுத்தி தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தை மீறுகின்ற ஆளொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொல்லியல் திணைக்களத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் இயலுமை உண்டு. அதற்கமைய, குறித்த அரச நிறுவனத்தால் இலங்கையில் தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்துப் பேணுவதற்கும் ஒத்துழைப்பு வழங்குகி வருகின்றது.

அதற்காக குறித்த நிறுவனங்களிலுள்ள பணியாளர் குழாமை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொருத்தமான ஒழுங்குவிதிகளை விதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. உள்ளுர் நிர்வாகக் கம்பனிகளால் மூலப்பொருள் இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய கொடுப்பனவு மூலதனத்திற்காக வெளிநாடுகளில் குறுகியகால வெளிநாட்டுச் செலாவணி நிதிக்கடன் பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வெளியிடல்

உள்ளுர் நிர்வாகக் கம்பனிகள் உள்ளுர் சந்தைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது, இலங்கைக்கு வெளியே தாபிக்கப்பட்டுள்ள அதன் தாய்க் கம்பனி அல்லது ஒரே கம்பனியின் கூட்டுக் கம்பனியால் அனுப்பப்படுகின்ற வெளிநாட்டுச் செலாவணியைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் 7(1) உறுப்புரையின் கீழ் ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

வெளிநாட்டு செலாவணிச் சந்தையின் அடிப்படையில் ஏற்படக்கூடிய எதிர்மய விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்புடையதாக வெளிநாட்டு செலாவணியை எமது நாட்டிலிருந்த வெளியே அனுப்புதலை நிறுத்துதல்ஃமட்டுப்பாடுகளை விதிப்பதற்கு வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய அடிக்கடி ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலம் 2022.12.29 ஆம் திகதி முடிவடைகின்றது. அதனால், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலத்தை 2022.12.30 ஆம் திகதி வரை 06 மாதகாலத்திற்கு நீடிப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. உலக காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கான ஆசிய பசுபிக் வலையமைப்பு (Asia – Pacific Network for Global Climate Change Research) தெற்காசிய பிராந்திய குழுக் கூட்டம் மற்றும் கருத்திட்ட முன்மொழிவு அபிவிருத்திப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துதல்

உலக காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கான வலையமைப்பு என்பது உலக காலநிலை மாற்றங்கள் மற்றும் நிலைபெறுதகு இலக்குகளுக்கான சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கெடுப்பதற்கு இயலுமாகும் வகையில் ஆசிய பசுபிக் வலயத்தில் செயற்படுகின்ற 22 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்ற அரசுகளுக்கிடைய வலையமைப்பாகும். குறித்த வலையமைப்பின் முக்கிய நோக்கமாக அமைவது, ஆசிய பசுபிக் வலயத்தில் உலக நிலைபெறுதகு இலக்குகளுக்காக மேற்கொள்ள வேண்டிய பிராந்திய ரீதியான இயலளவு விருத்தியை ஏற்படுத்துவதாகும்.

உலக காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளுக்கான ஆசிய பசுபிக் வலையமைப்பு உபவலயக் குழுக் கூட்டம் மற்றும் தெற்காசிய கருத்திட்ட முன்மொழிவு அபிவிருத்திப் பயிற்சி நிகழ்ச்சியை 2022.11.29 தொடக்கம் 2022.12.01 வரை கொழும்பில் நடாத்துவதற்காக இலங்கை அரசால் உபசரிப்புக்களை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − 55 =

Back to top button
error: