தேசிய சூரா சபைக்கு புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு
தேசிய சூரா சபையின் ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் பொதுக்கூட்டம் அதன் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் தலைமையில் கொழும்பு அல் ஹிதயா கல்லூரியின் பஹார்டீன் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது
இப் பொதுக் கூட்டத்தில் கடந்த பொதுக் கூட்ட அறிக்கை மற்றும் கடந்த இரு வருடங்களில் சூரா சபை மேற்கொண்ட பணிகள் பற்றிய அறிக்கை என்பன அதன் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் நிதி அறிக்கையை மௌலவி ஸியாத் இப்ராஹிம் அவர்கள் சமர்ப்பித்தார்.
சூரா சபையின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், அவர்கள் “சூரா சபை நேற்று, இன்று, நாளை” என்ற தலைப்பில் அதன் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய விரிந்த ஒரு விளக்கத்தை வழங்கினார். 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூரா சபையானது கடந்த ஒன்பது வருடங்களாக பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும் அதற்காக சமூகத்தின் புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கூட்டத்தின்போது தேசிய சூரா சபையின் சட்டக் கோவையில் திருத்தங்கள் முன்மொழிபட்டு அதுவும் அங்கீகரிக்கப்பட்டது. மேற்படி பொதுச் சபைக் கூட்டத்தின் போது 35 பேர் கொண்ட நிறைவேற்று குழு தெரிவு செய்யப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டத்தின்போது அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது
தேசிய சூரா சபையின் தலைவராக சட்டத்தரணி ரீ.கே.அஸூர் அவர்களும், உப தலைவர்களாக அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், சட்டத்தரணி ஜாவித் யூசுப், எம்.எச்.எம்.ஹசன், செயலாளராக சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், உதவி செயலாளராக சரப் அமீர், பர்சான் ராசிக், பொருளாளராக மௌலவி எஸ்.எல்.நெளபர், உதவி பொருளாளராக நளீம் மஹ்ரூப் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஏனைய நிறைவேற்று குழு உறுப்பினர்களாக எம்.அஜ்வதீன், ரிசா யஹியா, வைத்தியர் ரியால் காசிம், ஷேய்ஹ் நஜ்மான் சாஹித், எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ், எஸ்.எம்.எம்.இஸ்மத், வைத்தியர் மரீனா ரிபாய், நூருல் இஸ்ரா, என்.பி.நுஹுமான் ஆகியபோர்களும்
தேசிய சூரா சபையின் 11 உறுப்பு அமைப்புகளது பிரதிநிதிகளாக டி.ஜி.எம்.எஸ்.எம்.ராபி, ஷாம் நவாஸ், எம்.ஆர்.எம்.சரூக், எம்.ஜெ.எம்.வாரிட், அஸ்பக், அப்துல்லா மொஹிதீன், ஆர்.ஏ.அட்ஜுமைன், அஷ்ஷேஹ் ஏ.எம்.எம்.அசாத், ஜெ.எம்.ரிபாஸ், மௌலவி எஸ்.எல்.நெளபர் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள்
இப்பொதுக் கூட்டத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் பலரும் தேசிய சூரா சபையின் 11 உறுப்பு அமைப்புகளது பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.