அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம்
இலங்கை அரசாங்கம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது
டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நேற்று (02) ஆரம்பித்துள்ளது.
கேகாலை மாவட்ட செயலகத்தில் 1,00,000 அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் அரசாங்க அதிகாரிகள் பலர் இணைந்து கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் படி நாட்டின் முழு அரச சேவையையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மிக வலுவான விரைவான அரச சேவையை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான இலட்சியமாகுமென நிகழ்வில் கலந்துகொண்ட தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.