டிசம்பரில் 60 வயது பூர்த்தி செய்த 25 000 மேறப்பட்ட ஊழியா்கள் ஓய்வு
(அஷ்ரப் ஏ சமத்)
25 000 மேறப்பட்ட அரச ஊழியா்கள் டிசம்பா் 31 உடன் 60 வயதினை பூர்த்தி செய்தவா்கள் ஓய்வு பெருகின்றனா்.
இதில் விசேட வைத்தியா்கள் 200. ஆசிரியா்கள் 2000 பொலிஸ் அதிகாரிகள் என பலரும் அடங்குகின்றனா்.
அமைச்சுக்கள், திணைக்களங்கள். மகாணசபைகள், உள்ளுராட்சி, மற்றும் அதிகார சபைகள், கூட்டுத்தாபணங்களிலும் இவ் 25 ஆயிரம் பேர்களும் அடங்குகின்றனர் என பொதுநிர்வாக மாகாண சபைகள் அமைச்சின் செயலாளா் பிரியந்த மாயதுன்ன தெரிவித்தாா்.
இலங்கையைில் அரச சேவையில் 15 இலட்சம் ஊழியா்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வருடாந்தம் 30 வீதமான நிதி அரச உத்தியோகத்தா்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே பயன்படுகின்றன. .இதில் ஆக்க கூடுதலாக பாதுகாப்புப் பிரிவுக்கே கூடுதலான ஊழியா்கள் சேவையாற்றுகின்றனா்.
சில உயா் பதவிக்கு ஓய்வு பெறுபவா் பதில் கடமைக்கு எவரும் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சு அமைச்சரவை அல்லது அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு நியமிக்க முடியும் எனவும் செயலாளா் தெரிவித்தாா்.
இதனால் இளம் ஊழியா்களுக்கு பதில் கடமைகளைப் பெற முடியும். அன்மையில் பட்டதாரிகள் 68 ஆயிரம் பேர் அபிவிருத்தி உத்தியோகத்தா்களாக நியமிக்கப்பட்டவா்களை பயிற்சி அளித்து அவா்களை பதில் கடமைகளில் சேர்த்துக் கொள்ள முடியும். இலங்கையில் தற்போழுது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களினால் திரைசேரி புதிய நியமனங்கள் அல்லது ஆட்சேர்ப்புக்களை இடை நிறுத்தி வைத்துள்ளது.
அதனைவிடவும் அமைச்சுக்கள் ,திணைக்களங்கள் அதிகார சபைகளில் எவ்வித பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மந்த கெதியில் உள்ளன. சில திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.