பொது
இலங்கையின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் தூசு துகள் அளவு அதிகரிப்பு
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு, இன்று (08) கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது உடலுக்கு உகந்த நிலையில் அல்லாத அளவில் காணப்படுவதன் காரணமாக பரந்த வெளியிடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் உள்ள தூசித் துகள்களின் அளவு நாளைய தினமளவில் வழமைக்கு திரும்புமென எதிர்பார்ப்பதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின், சுற்றாடல் திணைக்கள பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.