பொது
அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகள் ஆரம்பம்
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு அதிகரித்த நிலையில் கடந்த திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளும், இன்று (12) திங்கட்கிழமை மீண்டும் வழமைபோல் திறக்கப்படுவதாக இலங்கை அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
காற்றின் தர மட்டங்களில் அசாதாரண வீழ்ச்சி காரணமாக, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 09 ஆம் திகதி மூடப்பட்டன.