அக்குறணையில் போதை பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம்
பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் ஏற்பாடு
அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஒவ்வொரு ஜும்மா பள்ளிவாயல்களிளும் போதைப்பொருள் விழிப்புணர்வு வேலை திட்டத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் நேற்று (22) தெரிவித்தார்
தரமான, நீண்ட கால அனுபவம் கொண்ட வளவாளர்களைக் கொண்டு போதைப் பொருள் விழிப்புணர்வு வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இவ் வேலை திட்டத்தின் முதல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (23) புலுகொஹொதென்னை அஹ்ஸன் ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுகையை தொடர்ந்து இடம்பெற இருக்கின்றது.
“போதைப்பொருளற்ற எதிர்காலம் உருவாவது எமது கைகளில்தான் தங்கி இருக்கின்றது” என்றும் இந்த நிகழ்வில் ஊர் மக்கள் உள்ளிட்ட நலன்விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.