crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கான சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) நேற்று (17) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது, சீன தனது புதிய வின்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளமைக்காக ஜெனரல் குணரத்ன தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 68 = 69

Back to top button
error: