இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்து தளர்வின்றி அமுல் படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணகக்கட்டுப்பாடு அமுலாக்கப்படும். தற்போது அமுலில் உள்ளவாறு மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.