தம்பலகாமத்தில் தையல் பயிற்சி மாணவர்களின் கண்காண்சி
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஊடாக இடம் பெற்று வரும் தையல் பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது.
கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவமானது புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சியில் 18 வகையான தையல் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் 2022 ம் ஆண்டில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களின் சுயதொழில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இவ்வாறான கண்காட்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இக் கண்காட்சியில் சிறுவர் ஆடை உற்பத்திகள்,கட்டில் விரிப்பனைகள்,தலையனை உரை,சிறு பைகள்,கால் துடைப்பான் என பல உற்பத்தி பொருட்கள் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், கிராமிய அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.பத்மராஜா,சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.பர்ஹானா,சிரேஷ்ட தையல் போதனாசிரியர் ஆர்.சர்வேஸ்வரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட தையல் போதனாசிரியர் எம்.கே.எல்.லீமா ரோசலின் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.