crossorigin="anonymous">
உள்நாடுபொது

முதியோரின் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்

வீட்டில் இருக்கும் முதியோரின் உடல் ஆரோக்கியம் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தில்ஹாரா சமரவீர இது குறித்து தெரிவிக்கையில்,

முதியவர்களிள் உடல் ஆரோக்கியத்தில் சிறிதளவு அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவர்கள் தொடர்பில் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

வைரசு நோய் தொற்று ஏற்பட்டால் பொதுவாக காய்ச்சல் ஏற்படுவதை நாம் காண்கின்றோம். முதியோரை பொறுத்தவரை இதற்கான நோய் அறிகுறிகள் தென்படாது. குறிப்பாக காய்ச்சல் ஏற்பட்டாலும் அவ்வாறான நிலை காணக்கூடும். சில முதியோர் உடல் பலவீனமான நிலையில் காணப்படுவார்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாம் அறியாமலேயே சிறுநீரை கழிக்கும் நிலை காணப்படக்கூடும்.

எனவே முதியோர் ஏதேனும் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். சிலர் கொரோனா நோய் தொடர்பாக மௌனமாக இருப்பார்கள்.

எனவே முதியோர் ஏதேனும் நோய் நிலைமைக்கு உள்ளாகும் போது உடனடியாக கவனம் செலுத்தாவிடின் அவர்கள் உயிரிழப்பை தவிர்க்க முடியாது என்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தில்ஹாரா சமரவீர மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 29 + = 32

Back to top button
error: