படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிட்டாத பின்னணியில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்விமான்ளுடன் இணைந்து சுதந்திர ஊடக இயக்கம் வருடாந்தம் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் ‘கருப்பு ஜனவரி நிகழ்வை’ நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
‘ஊடகத் தொழிற்துறையினரைப் பாதுகாக்க ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம்’ என்ற தொனிப்பொருளில் ‘கறுப்பு ஜனவரி நிகழ்வு’ இம்மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் பொரளை நாமல் மாலினி புஞ்சி தியேட்டரில் நடைபெறவுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்த பின்னர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹனா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம், சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரதம விருந்தினர் உரையை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நிகழ்த்தவுள்ளார்.