crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீதிபதிகளின் வருவாயில் வரி அறவிட இடைக்கால தடை

100000 ரூபாவிற்கு மேற்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, முற்பணம் சார்ந்த வருமான வரியை ஆட்சேபித்து இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபால ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 + = 39

Back to top button
error: