crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல்

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளை, இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்களை கோரும் அறிவித்தல் 2023.01.27ஆம் திகதி அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கான போட்டிப்பரீட்சை (2023) மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ளது.

விண்ணப்பதாரிகள் விண்ணப்ப முடிவுத் திகதி அன்று 40 வயதுக்கு குறையாமல் (2005.02.10 திகதிக்கு முன்னரும் 1983.02.10 திகதிக்கு பின்னரும் பிறந்திருத்தல்) இருக்க வேண்டும்.

இந்த நியமனம் தற்காலிகமானது. அதனால் அரச சேவையில் சமகாலத்தில் கிடைக்கும் சம்பள அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்படும் ஆசிரியர், ஒரு வருட பயிற்சியுடனான சேவையினை பூர்த்தி செய்த பின்னர், மூன்று வருட சேவையினை நிறைவு செய்ததும், நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

இதன்போது இலங்கை ஆசிரிய சேவையில் வகுப்பு 3 இன் ஆ தரத்தில் 14ஆவது சம்பள படியான 37,835/-சம்பளத்தில் நிறுத்தப்படுவார்.

விண்ணப்பதாரிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், கல்வி பொதுத் தரா தர உயர்தர மற்றும் சாதாரண பரீட்சைகளில் தேவையான தகைமையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பரீட்சைகள் ஆணையாளர், நிறுவன மற்றும் வெளிநாட்டு பரீட்சைகள் பிரிவு,இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தபால் பெட்டி 1503, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். 2023.01.27ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை https://applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: