crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின் வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை நிறைவடையும் வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவை மீறி, இலங்கை மின்சார சபை செயற்பட்டமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (02) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா இந்த உ றுதிமொழியை வழங்கியதுடன், இலங்கை மின்சார சபையூடாக திட்டமிட்டவகையில் குறித்த காலப்பகுதிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் மன்றுக்கு கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பீ.பத்மன் சூரசேன, யசந்த கோத்தாகொட, ஷிரான் குணதிலக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு மீதான பரிசீலனை முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 + = 12

Back to top button
error: