இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய தினமான நேற்று 4 ஆம் திகதி மாலை இடம்பெற்றது
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வில் ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் முன்றலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் அங்கு மர நடுகையும் முன்னெடுக்கப்பட்டது
தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரி,கெ அஸூர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அதன் நிறைவேற்று குழு, செயலகக் குழு, பொதுச்சபை உறுப்பினர்கள், ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்
இலங்கை மிக மோசமான பொருளாதார ‘நெருக்கடியை எதிர்கொண்டு எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சி நிலையில் இருப்பதினால் மேற்படி நிகழ்வு ‘நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றது.
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் நேற்று முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது.