சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேள 30 வருட பூர்த்தி நிகழ்வு
சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேளனத்தின் 30 வருட பூர்த்தியினை முன்னிட்டு கலை கலாசார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷேக் ஏ.எம்.அன்ஸார் (தப்லீகி) தலைமையில் 2023.02.05 ஆம் திகதி அல் ஹிலால் பாடசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலை, அஸ் சபீனா அஹதிய்யா பாடசாலை, தாறுல் குர்ஆனியா பாடசாலைகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும், அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், அதீதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.
அதிதிகளாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் என்.எம். ஏ.மலிக், அல் ஹிலால் வித்தியாலய அதிபர் யு.எல்.நசார், மழ்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி.என்.றிப்கா அன்ஸார், லீடர் அஷ்ரப் வித்தியாலய அதிபர் ஏ.ஐ.சம்சுதீன்
சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிப்பதுல் கரீம், சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் சலீம் (ஷர்கி), அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளத்தின் தலைவர் யு.எல்.றிபாய்தீன் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உலமாக்கள், அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.