crossorigin="anonymous">
உள்நாடுபொது
Trending

றோயல் டெக்னோலஜி கெம்பஸ் வழங்கும் உயர்கல்வி கல்வி புலமைப்பரிசில்

 

நவீன கல்வித்திட்டங்களுக்கு ஏற்புடைய வகையில் மாணவர்களை தயார்படுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்த றோயல் டெக்னோலஜி கெம்பஸ் மற்றும், வடக்கு கிழக்கு தனியார் பல்கலைக்கழக தலைவருமான மொஹமட் அனஸ், உயர்கல்வியை கற்பதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

உயர் கல்வியை கற்பதற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று அல் ரஹ்மானிய வித்தியாயலத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையில் 15 அரச பல்கலைக்கழகங்கள் காணப்படுவதுடன், ஒவ்வொரு வருடமும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறே கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 3இலட்சத்து 50ஆயிரம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதுடன், வருடாந்தம் சுமார் 12,000 இலங்கை மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர்.

இதன் மூலம் நாட்டிலிருந்து 400 மில்லியனுக்கும் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட அளவில் அந்நிய செலாவணி வெளியேற்றப்படுகிறது.

க.பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ள மாணவர்கள் உயர் கல்வியை தொடர முடியாது ஏதேனும் தொழிலில் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடிச் செல்வதுடன், சிலர் குடும்பத் தொழில்களில் ஈடுபட்டு கல்விச் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் இம்மாணவர்கள் கைத்தொழில் மற்றும் தொழிற்பயிற்சி துறைகளில் ஈடுபடாது இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
அந்த வகையில் தராதர உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக தகுதியை இழந்துள்ள மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடத்தில் பட்டமொன்றை பெறுவதற்கான வேலைத்திட்டம் றோயல் டெக்னோலஜி கெம்பஸ் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வறுமைக் கோட்டின் வாழக்கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து முழுமையான புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் பல காணப்பட்டாலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை கொடுப்பதில் றோயல் டெக்னோலஜி கெம்பஸ் மாத்திரமே செயற்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 + = 46

Back to top button
error: