இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2023 ஆண்டுக்கான ஹஜ் பிரயாண ஏற்பாடுகளுக்கென எந்தவொரு முகவர் நிலையத்தையும் இதுவரை உத்தியோகபூர்வமாக நியமிக்கவில்லை என இன்று (10) தெரிவித்துள்ளது
2023 ஆண்டுக்கான ஹஜ் பிரயாண ஏற்பாடுகளுக்கு திணைக்களம் உத்தியோகபூர்வமாக முகவர்களை நியமிக்கும்வரை எந்தவொரு முகவரிடமும் தமது கடவுச்சீட்டு அல்லது முற்பணம் அல்லது அதனுடன் தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல் எதனையும் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வருவதற்கு முன் 2023 ஆண்டுக்கான ஹஜ் பிரயாணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் திணைக்களம் பொறுப்பேற்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.