மொனராகலை – வெல்லவாய, புத்தலையில் 3 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு இன்று (10) பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12:11 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் (Seismic Stations) இந்த அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்; பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் தகவலின் படி, இந்திய பெருங்கடலில் இரண்டு அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் 4.6 மெக்னிட்யூட் நில அதிர்வும் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜில் (Carlsberg Ridge) 4.7 நிலநடுக்கமும் பதிவாகியுள்ளன.
புத்தல பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு அருகாமையில் 3 ரிக்டர் அளவிலான நில நடுக்க சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்; பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை . இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது