உள்நாடுபிராந்தியம்
முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பாடசாலையில் தீ விபத்து, தற்காலிக கட்டிடம் எரிந்து நாசம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு அ.த.க. பாடசாலையின் தற்காலிக கட்டிடம் ஒன்று இன்று (19) தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
பயணத் தடை விதிக்கப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ள வேளை காலை பாடசாலைக்கு அதிபர் சென்று பார்வையிட்டபோது தற்காலிக கட்டிடம் தீயில் எரிந்துள்ளது.
இத்தீ விபத்தினால் குறித்த தற்காலிக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் 24 கதிரைகள், 20 மேசைகள், 4 கரும்பலைககள் என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளன
இது தொடர்பில் பாடசாலை முதல்வரால் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.