வவுனியா பிரதான மரக்கறி சந்தையில் இன்று (13) சில மரக்கறிகளின் மொத்த விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ளது.
வரிபீர்க்கங்காய், தக்காளி, கறிவாழை, கோவா, வெண்டிக்காய், முள்ளங்கி, வெள்ளரிக்காய், கெக்கரிக்காய், புடலங்காய், பயிற்றை போன்ற மரக்கறிகளின் மொத்த விலை 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ளது.
அண்மைக்காலத்தில் இந்த மரக்கறிகளின் விலைகள் சந்தையில் 300 ரூபாவுக்கும் அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதவி, மதவாச்சி, வெலிஓயா, புளியங்குளம், நெடுங்கேணி, கிளிநொச்சி, மன்னார், கெப்பத்திகொலாவ மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து வவுனியா பிரதான சந்தைக்கு மரக்கறிகள் கொண்டு வரப்படுவதனால் அவற்றின் விலைகள் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
தென் மாகாண வியாபாரிகளும் வவுனியா சந்தையிலிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.