கொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையத்தினுள் நேற்றிரவு (14) திருடர்கள் நுழைந்து அங்கிருந்த லெப்டாப் உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்திய விசா விண்ணப்ப நிலையயத்தினுள் பெட்டகத்திலிருந்த பணத்தையும் திருடர்கள் திருடி சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
இதனையடுத்து இந்திய விசா விண்ணப்ப நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.டன் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய விசா விண்ணப்ப நிலையத்தினுள் திருடர்கள் நுழைந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
பம்பலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.