பிராந்தியம்
சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான செயலமர்வு
மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார ஊக்குவிப்பு செயலமர்வு நேற்று (16) பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வியாபாரத்தை ஊக்குவிப்பிப்பதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் வியாபாரத்தின் பலம் மற்றும் பலவீனம் மற்றும் அதில் தாக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் சிறு தொழில் முயற்சியாளர்களை ஹற்றன் நெஷனல் வங்கியுடன் தொடர்பேற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு கடன் பெறும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
இச்செயலமர்வில் வியாபாரத்தில் ஈடுபடுவர்களும், புதிதாக வியாபாரத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கும் தொழில் முயற்சியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.