முஸ்லிம் மீடியா போரம் நடத்திய 73ஆவது ஊடகக் கருத்தரங்கு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (19) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் (தேசிய பாடசாலை யில்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி திருமதி புர்கான் பீ இப்திகார் மற்றும் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.நவாஸ் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது
ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் இக்கருத்தரங்கு இரு அம்சங்களாக இடம்பெற்றது
பாடசாலைகளின் ஊடகக்கழக அங்கத்தவர்கள் , பொறுப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கு புறம்பான ஒரு கருத்தரங்கும் அல் அஸ்ஹர் உட்பட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான ஊடகக் கருத்தரங்கொன்றும் புறம்பாகவும் நடைபெற்றது
இக்கருத்தரங்கில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளரும் நவமணி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன், மீடியா போரத்தின் பொதுச் செயலாளரும் ஊடாக பயிற்றுவிப்பாளருமான சிஹார் அனீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான தாஹா முஸம்மில், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம் . பி. எம் பைரூஸ், போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினரான ஊடகவியலாளர்சாமிலா ஷரீப், உப தலைவர் எம். ஏ. எம். நிலாம், உதவி பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினரான அஷ்ரப் ஏ ஸமத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்
சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.