(அஷ்ரப் ஏ சமத்)
பிரான்ஸ் அரசும் மற்றும் மிச்சிலின்(MICHELIN Company ) குருப்பின் நிதி உதவியுடன் மொனராகலை. மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 6000 இயற்கை சிறு இறப்பா் செய்கையாளர்களின் திறன் கட்டியெழுப்புவதற்கு புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத் திட்டம் இறப்பர் பயிற் செய்கையை மீள இலங்கையில் உற்பத்தி செய்து அதனை பிரான்ஸ் நாடு தமது வாகனங்களுக்கான டயர் உற்பத்தியிற்கு இறப்பரை ஏற்றுமதி செய்வதற்காக இலங்கையில் முதலிடுகின்றது.
இத்திட்டத்தினால் இறப்பா் மேம்பாட்டு பெறுமதி சங்கிலி மற்றும் அதனுடன் இணைந்து சிறு செய்கையாளர்களின் மீட்சிக்கான (றிவர்) திட்டம் பெருந்தோட்டத்துறை அமைச்சும் பிரான்ஸ் அரசாங்கமும் மிச்சிலின் குருப் மற்றும் மிச்சிலின் லங்கா என்ற கம்பனியும் இணைந்து நேற்று (22) அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தினால் பயிற்சி, வெற்றுக்காணிகளை பயன்படுத்துதல், நேரடியாக 3000 குடும்பங்கள் நன்மையடைவா், இல்ஙகையின் பொருளாதாரப் பிரச்சினையில் இத்திட்டத்தினால் சிறு விவசாயிகள் நன்மையடையவுள்ளனா் அத்துடன் இறப்பர் செய்கை பண்ணப்பட்டு இறப்பர் எடுக்கப்பட்டு இலங்கையிலேயே மெச்சிலின் வாகன டயா்கள்கள் உற்பத்தி செய்யப்படும்.
மேற்படி நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள சுகம்பாயவில் உள்ள பெருந்தோட்ட அமைச்சின் அமைச்சா் டொக்டர் ரமேஸ் பத்திரன தலைமையில் அமைச்சின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான துாதுவா் ஜோன் பிரான்கொயிஸ் பக்டெட் , மற்றும் பிரான்ஸ் நாட்டின் மிச்சிலின் கம்பனியின் அதிகாரிகள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டனா்
இந்த மூன்றாண்டு காலத்திட்டம் அரச தனியாா் பங்காண்மையில் முன்னெடுக்கப்படுவதுடன் திட்டத்திற்கான நிதி உதவிப் பங்களிப்பை பிரான்ஸ் பொருளாதார மற்றும் ்நிதி அமைச்சினால் வழங்கப்படுகின்றன.
பசுமையான புத்தாக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட 565,000 யூரோக்களினுடாக இந்த உதவி வழங்கப்படுகி்ன்றமை குறிப்பிடத்தக்கது.
மிச்சிலின் குருப்பினால் இத்தத் திட்டத்துக்கு இணைந்த நிதி வசதிகள் வழங்கப்படுவதுடன் உள்நாட்டு துணை நிறுவனமான மிச்சிலின் லங்காவினால் செயற்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும். திட்ட வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை பிரான்ஸின் தனியாா் பொறுப்புடைமை நிறுவனமான கெஸ்பா இனால் இலங்கையின் பெருந்தோட்டத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும்.
இறப்பர் செய்கை மற்றும் இதர பரந்த பயிர்ச் செய்கை மொனராகல, அம்பாறை பிரதேசத்தில் 3000 இறப்பா் உற்பத்தியாளா்கள் நன்மையடைய உள்ளனா்.
இத்திட்டத்திற்கு 1 மில்லியன் யூரோக்களை பிரான்ஸ் அரசு இலங்கையில் முதலிடுகின்றது. 6000 ஏக்கரில் இறப்பர் பயிர் செய்கை பண்ணப்பட்டு அதனுடாக இலங்கையிலிருந்து இறப்பரை ஏற்றுமதி செய்வதற்கு பிரான்ஸ் உடன்பாடு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இறப்பர் திட்டத்திற்காக பிரான்ஸ் இந்தோனிசியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
கடந்த காலங்களில் 150 மெற்றிக் டொன் இறப்பர் ஏற்றுமதி இலங்கையில் 75 மெற்றிக் தொன்னாக குறைந்துள்ளது இத் திட்டத்தினால் இலங்கையில் எதிா்காலத்தில் மேலும் இறப்பர் ஏற்றுமதி அதிகரிக்கப்படுமென பெருந்தோட்ட அமைச்சா் டொக்டா் ரமேஸ் பத்திரன தெரிவித்தாா்.