உள்நாடுபிராந்தியம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா ஆடைத் தொழிற்சாலை முன்பாக நேற்று (18) மாலை 5.00 மணியளவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பலத்த சேதமடைந்ததுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.