இலங்கை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, நீர் கட்டணம் செலுத்துவது 40% ஆக குறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளதுடன் 8400 மில்லியன் ரூபா நிலுவை கட்டணத்தை நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவை கட்டணத்தில் 6200 மில்லியன் ரூபா கட்டணத்ம் வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தப்படாமையால் சபையின் நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது