இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் (Raisina Dialogue) மாநாடடில் கலந்துகொள்வதற்காக நாளை 02 ஆம் திகதி இந்தியா பயணமாகிறார்
மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந் துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 04 ஆம் திகதி வரை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் தங்கியிருப்பார்