crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீன தூதுவராலயத்தின் ஒத்துழைப்புடன் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு

சீன – இலங்கை பெளத்த நட்புறவுச் சங்கம் மற்றும் சீன தூதுவராலயத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களை சேர்ந்த 225 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டன.

குச்சவெளி பிச்சமல் விகாரை வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சீனா இலங்கையின் நண்பன் என்றடிப்படையில் பல உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் ஒரு கட்டமாக இவ்வுதவி அமையப்பெறுவதாக சீன தூதுவர் கிவ் சென்ஹொங் இதன்போது தெரிவித்தார்.

சீனா இலங்கை கடினமான நிலவரங்களை சந்தித்தபோது அதிலிருந்து மீட்சிபெற ஆரம்பம் முதல் இன்றுவரை ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய தேரர்கள், இலங்கைக்கான சீன தூதுவர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சீன தூதுவராலயத்தின் அதிகாரிகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம்.பி. எஸ். ரத்னாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம, குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன், இலங்கை- சீன பெளத்த நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 4 = 13

Back to top button
error: