crossorigin="anonymous">
உள்நாடுபொது

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்

நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்பு

நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (03) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.

நேற்று காலை 7 மணியளவில் யாழ். மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் பொழுது 60 நாட்டுப் படகுகளிலிருந்தும் 16 இழுவை மடிப் படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2,100 பக்தர்களும்

இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2,800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4,900 அதிகாரிகள் , வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5,100பேர் கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கச்சதீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணைதூதுவராலயம், இலங்கையின வெளிவிவகார அமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: