crossorigin="anonymous">
உள்நாடுபொது

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 25 – தேர்தல்கள் ஆ​ணைக்குழு

இலங்கை தேர்தல்கள் ஆ​ணைக்குழு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக விசேட அறிவித்தலொன்றை இன்று (07) அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு சாதகமான தினமாக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் திகதி குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 5

Back to top button
error: