crossorigin="anonymous">
உள்நாடுபொது

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

சட்டவிரோத முகவர்களிடம் பணம் வழங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை

2023 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில்  சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் முகவர்களிடம் பணம் வழங்குவதை தவிர்க்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 5 =

Back to top button
error: